நோக்கு
நிபுணத்துவம் மற்றும் நம்பகத் தன்மைமிக்க முன்னோடியாகச் செயற்பட்டு அனைவருக்கும் பாதுகாப்புமிக்க வான்பரப்பினை உறுதிப்படுத்தல்
செயற்பணி
மூல உபாயத் திட்டங்கள் மற்றும் உற்பத்தித் திறன்மிக்க மேற்பார்வைகள் ஊடாக சர்வதேச தரங்கள் உட்பட பரிந்துரை ஒப்பளவுகளுக்கும் தேசிய சட்ட ஒழுங்குத் தேவைகளுக்கு அமைவாக தற்காப்பு, பாதுகாப்பு, வினைத்திறன், முறையான மற்றும் சூழலுக்கு உகந்ததாக சிவில் விமான சேவைப் போக்குவரத்து முறைமையினை வழிநடத்துதல்
மீள்பார்வை
இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் அடிப்படைப் பணிகளாக அமைவது 2002 இலக்கம் 34 கொண்ட இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை சட்டத்தின் மற்றும் 2010 இலக்கம் 14 கொண்ட சிவில் விமானப் போக்குவரத்து சேவை சட்டத்தில் உள்ளடங்கும் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளின் கீழ் செயற்பட்டு சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பு (ICAO) வினால் அங்கீகரிக்கப்பட்ட உரிய சர்வதேச தரங்கள் மற்றும் பரிந்துரை ஒப்பளவுகளுக்கமைய சிவில் விமான சேவையின் தற்காப்பு, பாதுகாப்பு, வினைத்திறன் மற்றும் முறையான செயற்பாடுகளுடன் சிவின் விமானப் போக்குவரத்தின் மூலம் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை மேற்பார்வை செய்வதைப் போன்று இலங்கைப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்பி இலங்கை விமானப் போக்குவரத்து சேவைப் பிரிவின் மூலம் தேசிய பொருளாதார அபிவிருத்தியின் பங்களிப்புக்களை மேற்கொள்ளும் பங்காளர் பிரிவாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாகும்.
வாசகம்
"அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் மிக்க வான்பரப்பு"
தத்துவம்
எமக்கு மேல் உள்ள வான் வரப்பு சமூக பொருளாதார அபிவிருத்திக்கான மிகப் பெரிய இயலுமையுடன் எமது நாட்டின் முன்னேற்றம் உட்பட சுபீட்சத்திற்காகவும் தேசத்தின் சுபீட்சத்திற்காகவும் முகாமைத்துவத்திற்குட்படுத்த வேண்டிய பொதுச் சொத்தாகும்.
இலக்குகள்
- பாதுகாப்பு மற்றும் வினைத்திறன்மிக்க பெறுபேறுகளை எட்டுதல் அல்லது அதற்கு அப்பால் செல்லல்.
- விமான சேவையினை தொழில்சார் தரத்திற்கு மற்றும் தேர்ச்சி நிலைமைக்கு மாற்றியமைத்தல்.
- விமான சேவைக் கைத்தொழிலின் நம்பகத்தன்மை மற்றும் அங்கீகாரத்தை வெற்றி கொள்ளல்.
- விமான சேவைக் கைத்தொழிலின் செயற்சாதனையினை நிலையாக தொடர்ச்சியாக முன்னெடுத்தல் அல்லது விருத்தி செய்தல்.
- விமான சேவைக் கைத்தொழிலின் சகல செயற்பாடுகளையும் அதிஉயரிய மட்டத்தில் உற்பத்தித் திறன்மிக்கதாக மேற்கொள்ளல்.
- சர்வதேச தரங்கள் மற்றும் பரிந்துரை ஒப்பளவுகளுடன் இணைந்து உயரிய மட்டத்திற்கு முன்னெடுத்தல்.
- சிவில் விமான சேவைப் போக்குவரத்துச் செயற்பாடுகளைத் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பதற்காக பலம்மிக்க வசதிகளை வழங்குதல்.
மூல உபாயங்கள்
- சர்வதேச தரம் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட ஒப்பளவுகளுக்கமைய நிலையியற் சபைப் பணிகள் மேம்படுத்தப்பட்ட நிலையான மட்டத்தில் அமுல்படுத்தல் மற்றும் சமூகப் பொறுப்பினை நிறைவேற்றுதல்.
- விசேட விமான சேவைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனங்காணல் மற்றும் அத் தீர்வுகளை அமுல்படுத்தல்.
- கலாசார ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்வதற்காக விசேட ஆரம்பத்தை அறிமுகப்படுத்தல்.
- விமான சேவைக் கைத்தொழிலுடன் இணைக்கும் மற்றும் பங்குடமையினை ஏற்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
- நிலையான மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் வெளி உட்பட உள்ளகம் ஆகிய இரு முறைகளிலும் பயன்மிக்கதாக முறையில் தொடர்புசாதனச் செயற்பாடுகளில் ஈடுபடல்.
- சகல ஆவணங்கள், பொருட்கள் மற்றும் உள்ளகச் செயற்பாடுகளின் உற்பத்தித்திறன் மற்றும் நிலையான தன்மையினை பேணல்.