நோக்கு

சிறந்த மோட்டார் வாகனப் போக்குவரத்துச் செயற்பாடொன்றின் மூலம் மக்களின் உயர் அபிமானத்தை வென்றெடுத்தல்

செயற்பணி

தன்முனைப்பாற்றலுடன் கூடிய பணியாட்தொகுதியின் ஒன்றிணைந்த முயற்சியினூடாகவும், போக்குவரத்துச் சட்டம் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும் மக்களுக்கு அர்ப்பணிப்புடனும், நவீன தொழிநுட்பத்துடன் கூடியதுமான மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சேவையை வழங்குதல்.

மீள்பார்வை

இலங்கையில் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்கு 1928 சனவரி மாதம் 01 ஆம் ஆண்டு மோட்டார் வாகன போக்குவரத்து பதிவாளர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அது 1951 இலக்கம் 14 ஐக் கொண்ட மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் திணைக்களமாக தாபிக்கப்பட்டது. இந் நாட்டில் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், கண்காணித்தல், சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்தல், வீதிப் பாதுகாப்பு மற்றும் சுற்றாடலுக்கு நலன்பயக்கும் வகையிலான வினைத்திறன் வாய்ந்ததும், பயனுறுதி வாய்ந்ததுமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது இலங்கையில் வாகன பயன்பாடுகள் துரிதகதியில் அதிகரித்துக் காணப்படுவதுடனே பரந்துபட்ட திணைக்கள பணிகள் அளவு மற்றும் தரமான வகையில் பூர்த்தி செய்வது தொடர்பாகவும் நாராஹேன்பிட்டியின் பிரதான அலுவலகத்தை மையமாக கொண்டு, வேரஹர சாரதி அனுமதிப்பத்திரப் பிரிவு மற்றும் பெரும்பாலான மாவட்ட அலுவலகங்கள் (online) ஊடாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அனைத்து மாவட்ட அலுவலகங்களும் நிகழ்நிலை (online) தொடர்பாடல் மூலம் நாராஹேன்பிட்டயில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, கிராமிய/பிரதேச மட்டத்திலான சேவைபெறுநர்களின் எதிர்பார்ப்புக்கள்/தேவைப்பாடுகள் என்பவற்றை துரிதமாக நிறைவேற்றுவதற்கும், நவீன வசதிகள் மற்றும் புதிய தொழிநுட்பத்தினூடாக சேவைபெறுநர்களின் எதிர்பார்ப்புக்களை இலகுபடுத்துவதும் திணைக்களத்தின் அபிலாசையாகும்.