சமீபத்திய செய்திகள்

ශ්‍රී ලංකාවේ අධිවේගී මාර්ග පද්ධතියට නව නැම්මක්....

ප්‍රවාහන හා මහා මාර්ග අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන අධිවේගී මාර්ග ජාලය කළමනාකරණය කිරීම සඳහා පිහිටුවන ලදීම සහස්යා ඉන්වේස්ට්මන්ට් ආයතනයේ ප්‍රධාන කාර්යාලය බත්තරමුල්ල කොස්වත්ත පිහිටි මග නැගුම පරිශ්‍රයේ හත්වැනි මහලේ ස්ථාපිත...

Seamless travel from the Makumbura Multimodal Centre with Uber

Travelers arriving at the Makumbura Multimodal Centre (MMC) can now get a reliable, convenient and affordable Uber ride from a dedicated Uber pick-up point. Situated strategically within Sri Lanka’s expressway...

ශ්‍රී ලංකාවේ අධිවේගී මාර්ග පද්ධතියට නව නැම්මක්....

ප්‍රවාහන හා මහා මාර්ග අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන අධිවේගී මාර්ග ජාලය කළමනාකරණය කිරීම සඳහා පිහිටුවන...

Seamless travel from the Makumbura Multimodal Centre with...

Travelers arriving at the Makumbura Multimodal Centre (MMC) can now get a reliable, convenient and...

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி, பட்டாசு விபத்துகள் குறித்து...

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி, பட்டாசு விபத்துகள் குறித்து கவனம்! - அரசாங்கம் அறிவுறுத்தல் - 2024 ஆம்...

කොළඹ - බදුල්ල දුම්රිය මාර්ගයේ සියවස් පූර්ණය අද...

කොළඹ - බදුල්ල දුම්රිය මාර්ගයේ ශත වර්ෂ පූර්ණය සමරණුවස්, " දුන්හිඳ ඔඩිසි"  නව දුම්රිය 2024-04-05...

Transforming Urban Mobility

The Ministry of Transport invites visionary investors to participate in an unprecedented opportunity to redefine...

Driver's Licenses for Foreigners at the Airport...

Ministry of Transport and Highways and the Department of Motor Traffic have jointly planned a...

Awareness of Traffic Rules for School... Student Forums...

Road traffic accidents have increased drastically in Sri Lanka recent past and the number of...

A new mechanism to prevent bus accidents Ministry...

  A large percentage of the daily deaths in Sri Lanka is due to road...

நோக்கு

இலங்கையில் மிகச் சிறந்த மக்கள் நாடும் தரைப் போக்குவரத்து வழங்குபவராக எமது பங்காண்மையாளருக்கு அளவு கடந்த பெறுமானம் அளித்தல்

செயற்பணி

பயணிகளுக்கும் பண்டப் போக்குவரத்துக்குமான சிக்கனமானதும் வினைத்திறனானதுமான, பாதுகாப்பான, நம்பத்தகுந்த, நேரம் தப்பாத புகையிரதப் போக்குவரத்தை வழங்குதல்.

மீள்பார்வை

இலங்கை ரயில்வே ஆனது போக்குவரத்து அமைச்சின் கீழ் தொழிற்படும் அரச திணைக்களமாகும். இது மிகப் பெரும் போக்குவரத்து சேவையை வழங்குவதுடன் இது நாட்டிலுள்ள ஒரேயொரு ரயில்வே நிறுவனமாகவும் உள்ளது. இலங்கை புகையிரதமானது பயணிகளையும் பண்டங்களையும் போக்குவரத்துச் செய்கின்றது. இதன் ஆரம்பத்திலிருந்தே புகையிரதமானது பயணிகளை விட பண்டங்களையே அதிகமாகக் காவிச் செல்கின்றது. ஆனால் இன்று இது பயணிகள் நோக்கியதாக உள்ளது. இலங்கைப் புகையிரத்தில் பயணிகளுக்கான போக்குவரத்து சந்தைப்பங்கானது 6.0 % ஆகவும் பண்டங்களுக்கான போக்குவரத்தானது 0.7 % ஆகவும் உள்ளது.

இலங்கையில் புகையிரதச் சேவையானது நாளாந்த வேலைக்குச் செல்லும் வேலையாட்களை தினமும் எடுத்துச் செல்வது தவிர்க்க முடியாததாக உள்ளது. இலங்கைப் புகையிரமானது அண்ணளவாக 396 புகைவண்டிகளை 67 வெளியூர் புகைவண்டிகளை மற்றும் 16 நகரங்களுக்கிடையிலான புகைவண்டிகளை செயற்படுத்துவதுடன் நாட்டின் நாளாந்தம் 3.72 மில்லியன் பயணிகளுக்கு போக்குவரத்து அளிக்கின்றது.

இலங்கைப் புகையிரத சேவையானது 1561 கி.மீ. புகையிரதப் பாதைகளையும் 72 இழுவை புகைவண்டிகளை 565 புகையிரதப் பெட்டிகளையும் சமிக்ஞை வலைப்பின்னலையும் பேணுகின்றது. தற்போது அதனுடைய வேலைப்படை 17,634 ஆகும்.

இலங்கை புகையிரதமானது புகையிரத பொது முகாமையாளரின் கீழ் தொழிற்படுகிறது. பொது முகாமையாளர் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றார்.

இலங்கைப் புகையிரதமானது பத்து உப திணைக்களங்களாகவும், மூன்று அலகுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. உப திணைக்களங்களானவை உப திணைக்கள தலைவர்களால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. அவர்கள் நேரடியாக புகையிரத முகாமையாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள்.

நோக்கு

சிறந்த மோட்டார் வாகனப் போக்குவரத்துச் செயற்பாடொன்றின் மூலம் மக்களின் உயர் அபிமானத்தை வென்றெடுத்தல்

செயற்பணி

தன்முனைப்பாற்றலுடன் கூடிய பணியாட்தொகுதியின் ஒன்றிணைந்த முயற்சியினூடாகவும், போக்குவரத்துச் சட்டம் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும் மக்களுக்கு அர்ப்பணிப்புடனும், நவீன தொழிநுட்பத்துடன் கூடியதுமான மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சேவையை வழங்குதல்.

மீள்பார்வை

இலங்கையில் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்கு 1928 சனவரி மாதம் 01 ஆம் ஆண்டு மோட்டார் வாகன போக்குவரத்து பதிவாளர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அது 1951 இலக்கம் 14 ஐக் கொண்ட மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் திணைக்களமாக தாபிக்கப்பட்டது. இந் நாட்டில் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், கண்காணித்தல், சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்தல், வீதிப் பாதுகாப்பு மற்றும் சுற்றாடலுக்கு நலன்பயக்கும் வகையிலான வினைத்திறன் வாய்ந்ததும், பயனுறுதி வாய்ந்ததுமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது இலங்கையில் வாகன பயன்பாடுகள் துரிதகதியில் அதிகரித்துக் காணப்படுவதுடனே பரந்துபட்ட திணைக்கள பணிகள் அளவு மற்றும் தரமான வகையில் பூர்த்தி செய்வது தொடர்பாகவும் நாராஹேன்பிட்டியின் பிரதான அலுவலகத்தை மையமாக கொண்டு, வேரஹர சாரதி அனுமதிப்பத்திரப் பிரிவு மற்றும் பெரும்பாலான மாவட்ட அலுவலகங்கள் (online) ஊடாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

அனைத்து மாவட்ட அலுவலகங்களும் நிகழ்நிலை (online) தொடர்பாடல் மூலம் நாராஹேன்பிட்டயில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, கிராமிய/பிரதேச மட்டத்திலான சேவைபெறுநர்களின் எதிர்பார்ப்புக்கள்/தேவைப்பாடுகள் என்பவற்றை துரிதமாக நிறைவேற்றுவதற்கும், நவீன வசதிகள் மற்றும் புதிய தொழிநுட்பத்தினூடாக சேவைபெறுநர்களின் எதிர்பார்ப்புக்களை இலகுபடுத்துவதும் திணைக்களத்தின் அபிலாசையாகும்.

நோக்கு

நாட்டினுள் சமூக-பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்காக தரமிக்க, ஆகுசெலவு விளைபயன்மிக்க மற்றும் பாதுகாப்புமிக்க ஒன்றிணைக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டமைப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் மூலம் இலங்கையின் எல்லா குடிமக்களினதும் பல்வேறுபட்ட போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்தலை உறுதிப்படுத்துதல்.

செயற்பணி

எல்லா போக்குவரத்து ஊடகங்கள் குறித்தும் அவதானத்துடன், பயணியின் திருப்தி மற்றும் சிறந்த சந்தை நடவடிக்கையினை உறுதிப்படுத்துவதுடன் வினைதிறன்மிக்கதும் விளைபயன்மிக்கதுமான பேருந்துப் பயணிகள் போக்குவரத்து கட்டமைப்பினை நிறுவும் பொருட்டு ஒழுங்குபடுத்தற் திட்டத்தினை உருவாக்கிச் செயற்படுத்துதல்.

நோக்கு

நிபுணத்துவம் மற்றும் நம்பகத் தன்மைமிக்க முன்னோடியாகச் செயற்பட்டு அனைவருக்கும் பாதுகாப்புமிக்க வான்பரப்பினை உறுதிப்படுத்தல்

செயற்பணி

மூல உபாயத் திட்டங்கள் மற்றும் உற்பத்தித் திறன்மிக்க மேற்பார்வைகள் ஊடாக சர்வதேச தரங்கள் உட்பட பரிந்துரை ஒப்பளவுகளுக்கும் தேசிய சட்ட ஒழுங்குத் தேவைகளுக்கு அமைவாக தற்காப்பு, பாதுகாப்பு, வினைத்திறன், முறையான மற்றும் சூழலுக்கு உகந்ததாக சிவில் விமான சேவைப் போக்குவரத்து முறைமையினை வழிநடத்துதல்

மீள்பார்வை

இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் அடிப்படைப் பணிகளாக அமைவது 2002 இலக்கம் 34 கொண்ட இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை சட்டத்தின் மற்றும் 2010 இலக்கம் 14 கொண்ட சிவில் விமானப் போக்குவரத்து சேவை சட்டத்தில் உள்ளடங்கும் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளின் கீழ் செயற்பட்டு சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பு (ICAO) வினால் அங்கீகரிக்கப்பட்ட உரிய சர்வதேச தரங்கள் மற்றும் பரிந்துரை ஒப்பளவுகளுக்கமைய சிவில் விமான சேவையின் தற்காப்பு, பாதுகாப்பு, வினைத்திறன் மற்றும் முறையான செயற்பாடுகளுடன் சிவின் விமானப் போக்குவரத்தின் மூலம் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை மேற்பார்வை செய்வதைப் போன்று இலங்கைப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்பி இலங்கை விமானப் போக்குவரத்து சேவைப் பிரிவின் மூலம் தேசிய பொருளாதார அபிவிருத்தியின் பங்களிப்புக்களை மேற்கொள்ளும் பங்காளர் பிரிவாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாகும்.

வாசகம்

"அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் மிக்க வான்பரப்பு"

தத்துவம்

எமக்கு மேல் உள்ள வான் வரப்பு சமூக பொருளாதார அபிவிருத்திக்கான மிகப் பெரிய இயலுமையுடன் எமது நாட்டின் முன்னேற்றம் உட்பட சுபீட்சத்திற்காகவும் தேசத்தின் சுபீட்சத்திற்காகவும் முகாமைத்துவத்திற்குட்படுத்த வேண்டிய பொதுச் சொத்தாகும்.

இலக்குகள்

  • பாதுகாப்பு மற்றும் வினைத்திறன்மிக்க பெறுபேறுகளை எட்டுதல் அல்லது அதற்கு அப்பால் செல்லல்.
  • விமான சேவையினை தொழில்சார் தரத்திற்கு மற்றும் தேர்ச்சி நிலைமைக்கு மாற்றியமைத்தல்.
  • விமான சேவைக் கைத்தொழிலின் நம்பகத்தன்மை மற்றும் அங்கீகாரத்தை வெற்றி கொள்ளல்.
  • விமான சேவைக் கைத்தொழிலின் செயற்சாதனையினை நிலையாக தொடர்ச்சியாக முன்னெடுத்தல் அல்லது விருத்தி செய்தல்.
  • விமான சேவைக் கைத்தொழிலின் சகல செயற்பாடுகளையும் அதிஉயரிய மட்டத்தில் உற்பத்தித் திறன்மிக்கதாக மேற்கொள்ளல்.
  • சர்வதேச தரங்கள் மற்றும் பரிந்துரை ஒப்பளவுகளுடன் இணைந்து உயரிய மட்டத்திற்கு முன்னெடுத்தல்.
  • சிவில் விமான சேவைப் போக்குவரத்துச் செயற்பாடுகளைத் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பதற்காக பலம்மிக்க வசதிகளை வழங்குதல்.

மூல உபாயங்கள்

  • சர்வதேச தரம் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட ஒப்பளவுகளுக்கமைய நிலையியற் சபைப் பணிகள் மேம்படுத்தப்பட்ட நிலையான மட்டத்தில் அமுல்படுத்தல் மற்றும் சமூகப் பொறுப்பினை நிறைவேற்றுதல்.
  • விசேட விமான சேவைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனங்காணல் மற்றும் அத் தீர்வுகளை அமுல்படுத்தல்.
  • கலாசார ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்வதற்காக விசேட ஆரம்பத்தை அறிமுகப்படுத்தல்.
  • விமான சேவைக் கைத்தொழிலுடன் இணைக்கும் மற்றும் பங்குடமையினை ஏற்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
  • நிலையான மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் வெளி உட்பட உள்ளகம் ஆகிய இரு முறைகளிலும் பயன்மிக்கதாக முறையில் தொடர்புசாதனச் செயற்பாடுகளில் ஈடுபடல்.
  • சகல ஆவணங்கள், பொருட்கள் மற்றும் உள்ளகச் செயற்பாடுகளின் உற்பத்தித்திறன் மற்றும் நிலையான தன்மையினை பேணல்.
IMG 20220524 WA0004

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன

கெளரவ அமைச்சர்

செய்தியை காண்க

383e649f18cc6069882f006bbfe2eca5 XL

கௌரவ லசந்த அலகியவன்ன

கெளரவ இராஜாங்க அமைச்சர்

செய்தியை காண்க

mr r g rubasinghe
பொறி. ரங்ஜித் ரூபசிங்ஹ
செயலாளர்

செய்தியை காண்க

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு அன்புடன் வரவேற்கிறோம்

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு போக்குவரத்து துறைத் தொடர்பில் பொறுப்புகூற வேண்டிய இலங்கை மத்திய அரசாங்கத்தின் அமைச்சாகும்.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மற்றும் அதன் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற ஏனைய விடயங்கள் தேசிய கொள்கையொன்றைத் தயார் செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சு பொறுப்பு கூற முடியும். நாட்டின் புகையிரதம், பொது பேருந்து போக்குவரத்து முறை மற்றும் சிவில் விமானசேவை நடவடிக்கைகள் அமைச்சினால் நிர்வகிக்கப்படும்.

எமது நிறுவனங்களும் பயனுள்ள இணைப்புகளும்