நோக்கு

அனைவருக்கும் பாதுகாப்பான வீதி ஒழுங்குமுறை

செயற்பணி

நிலைப்பாட்டு அபிவிருத்தியின் பொருட்டு வீதி விபத்துக்களற்ற சமூகத்தை உருவாக்குதல்

மீள்பார்வை

1988 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்கம் கொண்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து அமைச்சின் கீழ் வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை செயல்படுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான வீதி ஒழுங்குமுறையை ஏற்படுத்துதல் என்ற கருப்பொருளின் கீழ் செயல்படுகின்ற ஒரேயொரு அரச நிறுவனமாக அமைவது வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையாகும். இந்த சபை தவிசாளரின் தலைமைத்துவத்தில் 16 அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பிரதிநிதிகளால் ஆனதுடன், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் 213 'அ' பிரிவினால் இந்த சபையின் கடமைப்பொறுப்பு குறித்துக் காட்டிருப்பதுடன், அக்குறித்த சபைக்காக நிதி வழங்குவதற்காக வீதிப் பாதுகாப்பு நிதியம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதிக்காக மூன்றாந் தரப்பினரின் அனைத்து மோட்டார் வாகன காப்புறுதி நிதியிலிருந்து, 1% வீதிப் பாதுகாப்பு வரி விதிக்கப்படுவதுடன் அவ்வாறு அறவிடப்பட்ட வரித்தொகை மாதாந்தம் இந்த நிதிக்கு உரிய காப்புறுதி நிறுவனம் மூலம் வரவு வைக்கப்படும்.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் நோக்கங்கள்

  • ஒழுக்காறு மற்றும் சட்டப்பேறுற்ற சாரதிகள் உருவாக்குவதனூடாக உயர் பயனுறுதிவாய்ந்த சாரதி சேவையொன்றை உருவாக்குவதற்காக தேவையான பின்னணி தயாரித்தல்.
  • விபத்துக்குள்ளாகி தப்பி ஓடுவதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிதியுதவி வழங்குதல் மற்றும் அத்தகைய விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கையெடுத்தல்.
  • வீதி மற்றும் அங்கு கையாளப்படுகின்ற வாகனங்கள் மற்றும் போக்குவரத்து செய்கின்ற பயணிகள் உட்பட பாதசாரிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அடையாளங் காணல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
  • வீதி பாதுகாப்பு தொடர்பாக தரவு சேகரித்தல், புலானாய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடாத்துதல் மற்றும் சர்வதேச தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.
  • அரசு துறை, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தேசிய வீதி பாதுகாப்பு கொள்கை செயல்முறைப்படுத்துதல் மற்றும் தோற்றுவிக்கப்படும் பலவீனங்களைக் கட்டுப்படுத்துதல்
  • வீதி விபத்துகளின் காரணமாக ஊனமுற்ற நபர்களின் புனர்வாழ்விற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • பொருளாதார தொழில்நுட்ப மற்றும் சமூகமாக ரீதியாக நடைமுறைப்படுத்த முடியுமான செயல்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சூழல் நட்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவதற்காக நிதியுதவி மற்றும் ஆலோசனை வழங்கல்
  • தேசிய போக்குவரத்து கொள்கையை தயாரிப்பது மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்தல்.
  • வீதி பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரித்தல் மற்றும் திருத்தம் போன்ற செயற்பாடுகளுக்கு தேவையான பங்களிப்புகளை வழங்குதல்.