IMG 20240220 WA0012

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட மின்சார முச்சக்கர வண்டி முன்னோடிக் கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வூ செய்வவதற்காக"; -

“நாளைய பசுமை" என்ற தொனிப்பொருளின் கீழ், சுற்றுசசூழல் பாதிப்பைக் குறைத்து,அதிகரித்து வரும் எரிபொருளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் செயற்;படுத்தப்படுகின்ற முச்சக்கரவண்டி மின்மயமாக்கல் முன்னோடிக் கருத்திட்டத்தின் முன்னேற்றம் மீளாய்வூ செய்யப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் 2024-02-019 திகதி நடைபெற்ற இந்த முன்னேற்ற மீளாய்வூக் கூட்டத்தில், இது தொடர்பான கருத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அங்கு தரப்பினர்கள் விழிப்பூட்டப்பட்டுள்ளனர்.

இக்கருத்திட்டத்தில் தற்போது எரிபொருளால் இயக்கப்படும் முச்சக்கர வண்டிகள் மின்சார ஆற்றலால் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அந்த செயல்பாட்ன்போது தேவையான தொழில்நுட்ப, செயற்பாடுகள் மற்றும் நடைமுறை நிலைமைகள் குறித்து அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்களும் ஆராய்ந்து, கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.

தற்போது, இலங்கையில் 1,184,423 முச்சக்கர வண்டிகள் பதிவூ செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் அங்கீகரிக்கப்படவூள்ள மின்- இடம்பெயர் ஆற்றல் (e – mobility)கொள்கைக்கு அமைய, மின்சார வாகனங்களின் பதிவு மற்றும் பாவனையை பிரபலப்படுத்தும் அடிப்படை நடவடிக்கையாக இந்த முன்னோடிக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் ரூபசிங்ஹ அவர்களின் தலைமைத்துவத்தில் இந்நிகழ்வூக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கைப் பிரதிநிதியான திருமதி அசுஷா குபோடா உட்பட தூதுக்குழு, கைத்தொழில் அமைச்சு,மோட்டார் போக்குவரத்து திணைக்களம், கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் அரச மற்றும் தனியார் வங்கியாளர்கள், தற்போது இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்கின்ற மற்றும் ஒரு திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்கின்ற தனியார் நிறுவனங்களுடன் முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலுக்கு இணைவாக இவ்வாறு மின்னாற்றலுக்கு மாற்றப்பட்ட பல முச்சக்கர வண்டிகளின் பரிசோதனைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.