நோக்கு

ஒவ்வொரு வழிச்செலுத்துகைக்குப் பின்னாலும் ஆரோக்கியமான சாரதியொருவரை உருவாக்குதல்

செயற்பணி

இலங்கையினுள் போக்குவரத்து மருத்துவத் துறையில் முன்னோடியாக இருந்து சகல சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கும் தரமான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு உடல், உள தகுதி பற்றி சான்றுப்படுத்துதல்.

மீள்பார்வை

வரையறுக்கப்பட்ட சவுத் செவஸ்டர்ன் பேரூந்துக் கம்பனிக்குச் சொந்தமாக இருந்து, அதன் ஊழியர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக மருத்துவ நிலையமொன்றாக இரத்மலானை டிப்போ வளவினுள் அமைந்திருந்த இந்த நிறுவனம், 1958 ஆம் ஆண்டு பேரூந்துக் கம்பனி மக்கள் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமாகியது. பேரூந்து மக்கள் மயமாகியதன் பின்னர் "இ.போ.ச. மருத்துவப் பிரிவு" எனும் பிரிவில் இது அழைக்கப்பட்டது. சேவை விரிவுபடுத்தும் நோக்கில் இரத்மலானை டிப்போ வளவினுள் அமைந்திருந்த மருத்துவ நிலையம் 1970 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக இருந்த நுகேகொடை ஹைலெவல் வீதி இல.170 எனும் முகவரியிலுள்ள இடத்திற்குக் கொண்டுவரப்பட்ட அதேவேளையில், தற்போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் எனும் பெயரில் போக்குவரத்து அமைச்சின் கீழ் சுயமாக வருமானத்தை உருவாக்கும் அரசாங்க நியதிச் சட்டமுறைச் சபையாக 1997 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக சட்டத்திற்கு அமைவாக தொழிற்படுகின்றது. இந்த நிறுவகத்தின் பிரதான நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு தலைமை அலுவலகம் மற்றும் இருபத்தைந்து (25) கிளைகள் நாடுமுழுவதும் தாபிக்கப்பட்டுள்ளன.

நிறுவகத்தின் எதிர்கால நோக்குக்கு இணையாக இலங்கையினுள் இருக்கின்ற கனரக வாகனங்கள், அதேபோன்று மென்ரக வாகனங்களின் சாரதிகளின் ஆரோக்கிய நிலை பற்றி சிறந்த மற்றும் தரமான மருத்துவ பரிசோதனையொன்றை மேற்கொண்டு அதன் பிரகாரம் மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்காக தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகம் ஆகியவற்றினூடாக தேவையான சேவைகளை வழங்கி நிறுவகத்தின் இலக்கை அடைந்துகொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

நோக்கங்கள்

  • சகல சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரரர்களினதும் உடல், உள தகுதியைப் பரிசோதனை செய்தல்.
  • வழங்கப்படுகின்ற மருத்துவச் சான்றிதழின் தரத்தையும் பாதுகாப்பு உபாயத் திட்டத்தையும் மேம்படுத்துதல்.
  • சிறந்த மனிதவள முகாமைத்துவத்தினூடாக சேவையின் தரத்தை அடைந்துகொள்ளுதல்.

நிறுவகத்தின் செயற்பாடுகள்

  • கனரக வாகனங்கள் உட்பட சகல வகையான மோட்டார் வாகனங்களையும் ஓட்டுகின்ற அல்லது செலுத்துகின்ற சாரதிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் மருத்துவ சேவையை வழங்குதல்.
  • கனரக வாகனங்கள் உட்பட சகல வகையான மோட்டார் வாகனங்களினதும் சாரதிகளையும் ஓட்டுநர்களையும் பரிசோதனை செய்து அந்த சாரதிகளினதும், ஓட்டுநர்களினதும் உடல் உள தகுதி பற்றிய நான்றிதழை வழங்குதல்.
  • கனரக வாகனங்கள் உட்பட சகல வகையான வாகனங்களினதும் சாரதிகளையும் ஓட்டுநர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் தகைமையையும் தகுதியையும் பற்றிய பரிந்துரைகளை வழங்குதல்.
  • ஏதாவதொரு வகையான மோட்டார் வாகனங்கள் தொடர்பான விபத்துடன் தொடர்புபட்ட சந்தர்ப்பங்களின் மருத்துவ சேவைகளை வழங்குதல்.
  • சகல வகைகளுக்கும் உரித்தான மோட்டார் வாகனங்கள் உடல், உள தகுதி கொண்டுள்ள நபர்களினால் மாத்திரம் செலுத்தப்படுகின்றது அல்லது ஓட்டப்படுகின்றது என்பதை நிறவனத்தினாலோ அல்லது ஏனைய முகவர் நிறுவனங்களினாலோ விசாரணை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம்செலுத்துதல்.
  • தொழிநுட்பக் கோளாருகள் மற்றும் தொழிநுட்ப விபத்துகள் பற்றிய மருத்துவ ஆலோசனையையும் பரிந்துரையையும் வழங்குதல்.
  • தொடர்புடைய செயற்படுத்தும் அதிகாரியினால் ஏற்றக்கொள்ளக்கூடியதும் செயற்படுத்த வேண்டியதுமான போக்குவரத்து மருத்துவ நடவடிக்கைகளுக்கு தரங்களைத் தயாரித்தலும் வரையறைகளை விதித்தலும்.